புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் !!!
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சொந்தமான மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வரும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா தொற்று பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.







