செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது!
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 144 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், அனகாபுத்தூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், பெருங்குளத்தூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிகிச்சை முடிந்து 1,968 பெயர் வீடு திரும்பிய நிலையில் 1,850 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையில் இன்று புதிதாக 144 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை 16 ஆக உயர்ந்துள்ளது.






