மாஸ்க் போடலயா..பைன் 100 ரூபாய் கட்டு !!!
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் தீவிர சோதனைக்கு பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.இன்று வனபத்ர காளியம்மன் கோவில் அருகே வாகனங்களில் வருவோரில் மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
மாஸ்க் அணியாமல் வந்தோரிடம் கொரோனா தொற்று குறித்தும்,அதன் தாக்கம் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.இதில் தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நித்யா நந்தகுமார்,துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் சதீஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






