கொரொனா பரவல் அதிகரிப்பால் மேலும் 4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கமா?
மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா பரவல் அதிகரிப்பால் முழு முடக்கத்தை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மதுரையில் பொது முடக்கம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு முழு முடக்கத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் ஜூன் 30 வரை அந்த மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமலாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் 705, வேலூரில் 477, ராணிப்பேட்டையில் 470 மற்றும் திருவண்ணாமலையில் ஆயிரத்து 60 பேருக்கு கொரொனாதொற்று ஏற்பட்டுள்ளது.






