--- --:--:-- --

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு!

8

எல்லையில் ஒரு அங்குல இடத்தை கூட விட்டுத்தர மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற சீன படைகளுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். லடாக் எல்லை நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக காணொலி முறையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசினார்.

 

எல்லையில் சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க நம் படைகளுக்கு சுதந்திரம் கொடுக்க பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடன் அமைதியும், நட்பும் முக்கியம் தான் என்றாலும் நாட்டின் இறையாண்மை அதைவிட முக்கியம் என்று குறிப்பிட்டார்.

 

நாட்டை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது படைகள் மேற்கொள்ளும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி சீன படைகளின் ஊடுருவல் நடைபெற்ற விதம் குறித்த விளக்க வேண்டும் என்றும் இதற்கு உளவுத்துறையின் தோல்வி காரணமா என்பதை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

மோதலுக்கு முன்பு இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகள் நிலை அப்படியே நீடிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தினார். மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். விவகாரத்தில் மத்திய அரசின் பின் வலுவாக நிற்பது அவர்களின் ஒருமனதாக குறிப்பிட்டனர்.

 

அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், திமுக சார்பில் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்.

 

நாட்டின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon