கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல்நிலை மோசமடைந்து இருக்கும் நிலையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு புதன் கிழமை கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் அவருக்கு மூச்சுத் திணறலும் தீவிர காய்ச்சலும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அமைச்சருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மருத்துவர்களின் அறிவுரை பின்பற்றப்படும் என கூறியுள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே சத்யேந்திர ஜெயின் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.






