ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா?
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்த் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அந்த வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கடலூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனைதொடர்ந்து அச்சிறுவன் வீட்டிற்கு சென்ற ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.





