4 மணி நேரம் 8 போன்ற வடிவத்தில் ஓடி சாதனைப்படைத்த திமுக செயலாளர் மா. சுப்பிரமணியன்!
ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான செயல்களை செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் மனிதநேயமிக்க செயலும் நடந்து வருகிறது. அதே சமயம் இளைஞர்கள் சிலர் புது வித செயல்களை செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து எட்டு வடிவ ஓடுதளத்தில் நான்கு மணி நேரத்திற்குள் தொடர்ந்து ஓடி ஆசிய ரெக்கார்டில் இடம் பிடித்திருக்கிறார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா சுப்பிரமணியன் பொது முடக்கத்தால் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப் பட்டிருப்பதால் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன மா சுப்பிரமணியன் தன்னுடைய வீட்டிலேயே எட்டு வடிவத்தில் ஓடுதளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவருடைய இந்த சாதனையை தேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.






