சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னை மாவட்டத்தில் கொரொனா பரவலின் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் தடையை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் தடையை மீறிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தடையை மீறி வெளியே வந்ததாக இதுவரை 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறி இன்றி தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் அவர்களின் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதைப்போல காவல்துறையினர் அவர்களை கண்காணிப்பார்கள் தடையை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 12ம் தேதி வரை 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த நான்கு நாட்களில் மட்டும் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை மீறுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனிமைப் படுத்தப் பட்டவர்கள் அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து காவல்துறையினர் அவர்களை கண்காணிக்க கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டுள்ளனர்.






