--- --:--:-- --

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர்!

1

கிழக்கு லடாக்கில் உள்ள கேள்வன் பள்ளத்தாக்கு, பாங்காங் பகுதியாகிய எல்லை பகுதிகளில் இந்தியத் துருப்புகள் குவிக்கப்பட்டு பதற்றம் அதிகரித்த நிலையில் அதை தணிக்க இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதையடுத்து அங்கிருந்து சீனப் படைகள் பல கிலோ மீட்டர் தூரம் பின் வாங்கியதாகவும் இந்தியத் துருப்புகள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்ட தாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்த நிலையில் கேள்வன் பள்ளத்தாக்கு எல்லையில் இருதரப்பு பள்ளத்தாக்கு எல்லைகளையும் அமைத்திருந்த தற்காலிக தங்கும் இடங்களை நேற்று மாலை அகற்றும் பணி நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில் இருதரப்பு வீரர்களும் ஒருவரையொருவர் கைகள், கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சகம் இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், ஜாவான்கள் இரண்டு பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

 

சீன தரப்பில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

 

திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பழனி(40) இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார். ராணுவ வீரர் பழனி ராணுவத்தில் ஹவில்தார் ஆக பணிபுரிகிறார். இவருக்கு வானதிதேவி என்ற மனைவியும். பிரசன்னா (10)என்ற ஆண் குழந்தையும். திவ்யா (7) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

 

இவர்கள் தற்போது ராமநாதபுரம் கழுகூரணி என்ற பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.இவர் இந்திய எல்லையான லடாக் பகுதியில் நடைபெற்ற சண்டையில் பலியானார்.
அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு நாளை திருவாடானை தாலுகா கடுக்கலூர் கிராமத்தில் அவர்கள் இல்லத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

 

லடாக் எல்லையில் உயிரிழந்த 3 பேருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வீர மரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon