--- --:--:-- --

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல்வெப்பத்தை கண்டறியும் தெர்மா மற்றும் கேமரா பொருத்தும் திட்டம்!

5

பயணிகளின் உடல் வெப்பத்தை துல்லியமாக கண்டறிய ரயில் நிலையங்களில் இரண்டு அடுக்கு கேமராவை பொருத்தும் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என்று கண்டறிய உடல் வெப்ப பரிசோதனைக்காக நிரந்தரமான தொழில் நுட்ப கட்டமைப்பை மேற்கொள்ள ரயில்வே முடிவெடுத்துள்ளது.

 

அதன்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கடைபிடித்து வரும் இரண்டு கேமராக்கள் சோதனை தொழில்நுட்ப வசதியை இந்தியாவில் கொண்டுவருவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதன்படி ரயில் நிலையங்களை நுழைவாயிலில் இந்த இரண்டு கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. பயணிகள் வரும்போது ஒரு மீட்டர் தொலைவிலிருந்து கண்காணிக்கும் இந்த தானியங்கி கேமராக்கள் ஒரு நொடியில் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும்.

Leave a Reply

Right Menu Icon