--- --:--:-- --

டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு..!

3.1

டெல்லியில் புதிதாக 2,317 பேருக்கு கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

 

இது தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் 24 மணி நேரத்தில் கொரொனாவிற்கு 71 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக டெல்லியில் வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,124 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேவேளையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று வரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 463 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் வீடுகளில் 17,261 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon