--- --:--:-- --

பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி வரி! கூடுதல் வரியால் சர்ச்சை!

2

பரோட்டாவிற்கு 18 சதவீதம் என்ற அளவில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவு பரோட்டா. இந்நிலையில் பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

பெங்களூரை சேர்ந்த ஐ‌டி ஃபிரெஷ் ஃபுட் என்ற நிறுவனம் தோசை மாவு, பரோட்டா, மலபார் பரோட்டா, கோதுமை பரோட்டா போன்ற உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி தொடர்பாக அத்தாரிட்டி பார் அட்வன்ஸ் ருளிங் அமைப்புடன் வழக்கு தொடுத்தது. இந்த அமைப்பானது ஜி‌எஸ்‌டி சம்பந்தமான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் மத்திய அரசியல் அமைப்பாகும்.

 

இந்த வழக்கின் தீர்ப்பில் பரோட்டா என்பது உயர்தர உணவு வகைகளில் ஒன்று என்பதால் அதற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 சதவீத வரி வசூலிக்கப்படும் சப்பாத்தி, ரொட்டி வகைகளில் அது சேராது என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்த தகவல் வெளியான நிலையில் சமூக வலைதளங்களில் கேரள மாநிலத்தை சேர்ந்த மற்றும் உணவுப் பிரியர்கள் #handsoffparota என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். உணவு பாசிசம் என்றும் நெட்டிசன்கள் கொந்தளிக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon