புதுச்சேரியில் தயாரிக்கப்படும் வெட்டிவேர் முக கவசம்!
பொது முடக்கத்தால் முடங்கி விட்ட தொழில்களை மீட்க பல தொழிலதிபர்களும் போராடி வரும் நிலையில் புதுச்சேரியில் இரண்டு இளைஞர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தங்களுடைய தொழிலை மாற்றி லாபம் ஈட்டி வருகிறார்கள். புதுச்சேரி லாஸ்பேட்டை சிறந்த செந்தில் ஆயத்த ஆடைகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.
15க்கும் அதிகமான தையல் கலைஞர்கள் இவரிடம் பணியாற்றுகிறார்கள். கொரொனா பொது முடக்கத்தால் ஏற்றுமதி தடைபட்டு விட செய்வதறியாமல் திணறிப் போனார். அவருடைய பணியாளர்கள் வேலை இழந்து தவித்து போனார்கள். அப்போது மூலிகை செடிகளை வளர்த்து ஏற்றுமதி செய்து வந்த பிரசன்னா என்பவரை சந்தித்துள்ளார்.
ஊரடங்கால் அவரும் ஏற்றுமதி தடைபட்டு தொழில் பாதிக்கப்பட்டிருந்தார். இருவரும் இணைந்து தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வாக கால தேவையான வெட்டிவேர் கவசத்தை தயாரிப்பது என முடிவெடுத்தனர்.
வெட்டிவேரு குறைந்த முக கவசத்திற்கு வரவேற்பு பெருகி விட அவற்றை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெட்டிவேரை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் தொடர்ந்து வேலை செய்து பயன் பெறுகிறார்கள் நறு மணமும் மருத்துவ குணமும் கொண்டது வேரை முக கவசத்தில் எளிதாக வைத்து பயன்படுத்தலாம். இதனால் இவற்றிற்கு சந்தையில் அதிக மவுஸ்.
பொது முடக்கத்தால் வேலை இழந்த தையல் கலைஞர்கள் வெட்டிவேர் பொதிந்த முககவசம் தயாரித்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.






