--- --:--:-- --

முதலிரவு அறையில் மணமகள் கொலை! மணமகன் நிர்வாணமாக தூக்கிட்டு தற்கொலை!

10

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரை அடுத்த சோம் அண்ட் ஜெர்ரி பகுதியை சேர்ந்த நீதி வாசன் என்பவருக்கும் சடயங்குப்பம் பகுதியை சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சந்தியா என்பவருக்கும் புதன்கிழமை காலையில் திருமணம் நடைபெற்றது. அன்று முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மணப்பெண் சந்தியா இரவு 11 மணி அளவில் பயங்கரமாக சப்தமிட்டு இருக்கிறார்.

 

வெளியில் படுத்து இருந்த பெரியவர் எழுந்து சென்று விசாரித்தபோது ஒன்றுமில்லை என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளான் மணமகன் நீதி வாசன். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் வேட்டி மட்டுமே அணிந்து இருந்த நீதிவாசன் உறக்க கத்தியவாறே முதலிரவு அறையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

 

இதனால் பதறியடித்து இறந்த உறவினர்கள் முதலிரவு அறைக்குள் சென்று பார்த்தபோது மணமகள் ஆடைகள் கலைந்த நிலையில் கடப்பாரையால் அடித்தும் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

முதலிரவு அறையில் இருந்து தப்பியோடிய மணமகன் நீதி வாசனை தேடி வந்த நிலையில் காலை 7 மணியளவில் அருகில் உள்ள வயல் வெளியில் உள்ள வேப்ப மரம் ஒன்றில் நீதி வாசன் ஆடைகள் இல்லாத நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தான். இதனையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

கடந்த சில ஆண்டுகளாக மணமகன் நீதி வாசன் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறான். பெண்களை பார்த்தால் ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் சுற்றும் பழக்கமும் நீதி வாசனுக்கு இருந்ததாக கூறுகிறார்கள். ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என உறவினர்கள் சிலரின் சொல்பேச்சு கேட்டு உறவுக்கார பெண்ணான சந்தியாவை ஒரு வருடத்திற்கு முன்பு பேசி முடித்து இருக்கின்றனர்.

 

அவனது பெற்றோர் இதற்கிடையே மனநிலை கோளாறுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வந்த நீதிவாசன் கொரொனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக அந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 

இந்த நிலையில்தான் திருமணத்தன்று முதலிரவு அறையில் வைத்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு நீதி வாசனும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து என்று சுட்டிக் காட்டுகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

 

அதே நேரத்தில் மனச்சிதைவு உள்ள நபர்களுக்கு மருத்துவம் மூலம் நோய் பரிசோதனை செய்து அதில் சம்பந்தப்பட்டவர் முழு உடல் மற்றும் மன நலத்துடன் இருந்தால் மட்டுமே திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் இல்லை என்றால் இது போன்ற விபரீத சம்பவங்கள் நிகழ காரணமாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon