துணை நடிகையை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நடிகர்!
சென்னையில் துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்த 32 வயது பெண் மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தரிசு நீளம் என்ற படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான தியாகராஜர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி அவருடன் ஒரே வீட்டில் வசித்ததாக தெரிவித்துள்ளார்.
தான் பல முறை கருத்தரித்ததாகவும் தியாகராஜன் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனிடையே தியாகராஜனுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்ததால் தன்னிடம் பேசுவதை தவிர்ப்பதாகவும் திருமணம் குறித்து பேசினால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடிகர் தியாகராஜனை கைது செய்துள்ளனர்.






