கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இருவர் தற்கொலை!
கேரளாவில் கொரொனாற்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தப்பி ஓடியவரை சுகாதாரத்துறையினர் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மதுவுக்கு அடிமையானதால் மது அருந்த முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதே மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மற்றொருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் விளக்கமளிக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.






