‘தற்போதைய சூழலில் எப்படி கடன் கட்டுவது’ – மாவட்ட நிர்வாகத்திடம் பெண்கள் புகார் !
கொரோனா நோய் பரவலைத் தவிர்க்க, அடுத்த கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக ஊரடங்கு காரணமாகக் பல இடங்களில் வேலை இல்லை. அதனால் தொழிலாளர்கள் வேலையின்றி கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தார்கள். இந்நிலையில் தொழிலாளர்கள் வாங்கிய கடன் தொகையை மொத்தமாக கட்ட வேண்டும் என சில தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடனால் தவிப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கூறுகையில்…, ” சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் பலரும் தொழில் செய்வதற்கு, வீட்டு தேவைக்கு என அவர் அவர் சொந்த செலவிற்காக பணம் பெற்றுள்ளோம்.

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை கடனை முறையாக செலுத்தி வந்தோம் இந்நிலையில் உலக நாடுகள் அனைத்து பீதியடைந்துள்ள கொரோனா காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் தற்போது உடனடியாக வாரக்கடன் மற்றும் மாதக்கடனை கட்ட வேண்டும் என கடன் கொடுத்த நிறுவனங்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே அரசு அறிவித்தது போல் மார்ச் மற்றும் ஆகஸ்ட் கடனை கொரோனா முடியும் வரை கேட்க கூடாது என மீண்டும் எச்சரித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று. தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கண்ணகி மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி லதா ஆகியோர் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.






