--- --:--:-- --

டுவிட்டரில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு ரவிசங்கர் பிரசாத் கண்டனம்!

1

இந்தியா – சீனா எல்லை விவகாரம் குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரவிசங்கர் பிரசாத் காலக்கோடு வான்வழி தாக்குதலுக்கு பின்னரும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற முறி தாக்குதலுக்கு பின்னரும் ஆதாரம் கேட்ட நபர் தான் ராகுல் காந்தி எனக் குறிப்பிட்டுள்ளார். சீனா போன்று சர்வதேச விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி கேட்கக் கூடாது என்பதை ராகுல்காந்தி அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் சீனர்கள் நடந்தே வந்து நமது பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி இது தொடர்பாக மோடி முற்றிலும் மௌனம் காப்பதோடு இந்த காட்சியிலேயே இல்லாமல் மறைந்து விட்டதாகவும் விமர்சித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon