--- --:--:-- --

ஊர்ப் பெயர்களைத் தமிழ் ஒலிக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுத வேண்டும்!

2

தமிழகம் முழுவதும் ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஊரின் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்று ஒலி வடிவங்களுக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் தொடர்பாக அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 18 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்து கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

உதாரணமாக ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில், இனி எழும்பூர் என்று ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ஆங்கிலத்தில் இதுவரை தொண்டியார்பேட் என எழுதி வந்ததை மாற்றி தண்டையார்பேட்டை என்று ஆங்கிலத்தில் எழுதப்படும்.

 

அதேபோன்று புரசிவாக்கம் என உச்சரிக்கும் வகையில் உள்ள புரசைவாக்கம் பகுதி இனிமேல் புரசைவாக்கம் என்று ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தப்படும். திருவல்லிக்கேணி ஆங்கிலத்தில் ட்ரிப்ளிகேன் என்பதற்கு பதிலாக திருவல்லிக்கேணி என அமைத்து செயல்படுத்தப்படும்.

 

கடலூர், மாவட்டம் சேத்தியாத்தோப்பு, சிவகங்கை, பூவிருந்தவல்லி, கூடலூர், தூத்துக்குடி, திருவைகுண்டம் பகுதிகள் ஆங்கிலத்தில் அமைத்து செயல்படுதல் வேண்டும்.

 

கோயம்புத்தூர் பெருநகரம், திருவில்லிபுத்தூர், திண்டிவனம் ,திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாகர்கோவில், வேலூர், மதுரை, மேலூர், வேடசந்தூர், வத்தலகுண்டு, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களையும் ஒலி வடிவத்திற்கு ஏற்ப ஆங்கிலத்தில் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் ஆணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon