--- --:--:-- --

தடாகம் புதிய காவல் நிலையத்திற்கான பூமி பூஜை.சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் !!!

14

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள தடாகத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதற்காக தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்தின் மூலம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 85 சென்ட் நிலத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்தின் செயற்பொறியாளர் சேகர்,உதவி செயற்பொறியாளர் ஸ்ரீநிவாஸ்,பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.மணி,காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம்,உதவி ஆய்வாளர் பொன்ராஜ்,சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட மாவட்ட கவுன்சிலர் கவி சரவணன்,ஒன்றிய கவுன்சிலர் தீபிகா சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon