பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது!
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூடங்குளம் அருகே குட்ட போலி சுனாமி காலனி பகுதியை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தந்தையான பவுல் என்ற மீனவர் வீட்டின் அருகே வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதே போன்று அப்பகுதி பெண்கள் பலரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.






