சிறையில் 10வது நாளாக முருகன் உண்ணாவிரதம்..!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் பத்தாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இலங்கையில் உயிரிழந்த தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோ காலில் முருகன் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தாயுடனும் வீடியோ கால் பேச அனுமதிக்கப்படவில்லை.
பின் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடன் வீடியோ கால் பேச அனுமதிக்க கோரி கடந்த ஒன்றாம் தேதி முதல் என்று பத்தாவது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாக அவருடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அவருக்கு உடல் சோர்வு காரணமாக குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டுள்ளது.






