103 வயதான மருத்துவர் கொரொனா தடுப்பு மருந்துக்கு நிதி திரட்ட மாராத்தான் நடை பயணம்!
பெல்ஜியம் நாட்டில் 103 வயதான மருத்துவர் கொரொனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கு நிதி திரட்டி உதவ தனது தோட்டத்தை சுற்றி மாராத்தான் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெல்ஜியத்தின் லீவிங் பல்கலைக்கழகத்தில் கொரொனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி நடைபெறுகிறது.
இதற்கு நிதி திரட்டி உதவி செய்யும் வகையில் ரக்சியலரை சேர்ந்த 103 வயது மருத்துவர் ஆல்ஃபொன்ஸ் கடந்த ஒன்றாம் தேதி முதல் தோட்டத்தை சுற்றி நடந்து வருகிறார். இம்மாதம் 30 ஆம் தேதி தனது நடை பயணத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதுவரை இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் அவர் திரட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.






