அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று தொடங்குகிறது!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இன்று தொடங்க உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை ஏற்கனவே நடந்த நிலையில் கோயில் கட்டும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோவில் பகுதியில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் நிலத்தை சமன் படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
தொடர்ச்சியாக இன்று ராம ஜென்மபூமி இடத்தில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் சிறப்பு பிரார்த்தனையும் காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கோயில் கட்டும் பணியின் தொடக்கமாக முதல் செங்கல் எடுத்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.






