--- --:--:-- --

10ஆம் வகுப்பு தேர்வு ரத்தால் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிக்கலா?

6

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது . அதேநேரத்தில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது குறித்து சில கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.

 

பொதுத்தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு அனைவருக்கும் தேர்ச்சியை அடிப்படையாக வழங்கி விட்டாலும் மேல் படிப்பில் சேருவதற்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் என அறிவித்துள்ளது.

 

மேல்நிலை கல்வியின் விருப்பத்தின் அடிப்படையில் தான் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றாலும் மதிப்பெண் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பு சேர்வதில் பாதிப்பு ஏற்படுமோ என்று சந்தேகம் மாணவர்களிடையே எழுந்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

சில மதிப்பெண்கள் வேறுபாட்டால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் மாணவர்களுக்கு நேராது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி என சிபிஎஸ்சி அறிவித்தபோது தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளி தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

 

அதுபோன்று தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விருப்பமுள்ள மாணவர்களுக்கு மட்டும் கொரொனா தொற்று முற்றிலும் குறைந்த பின்னர் பள்ளி அளவிலான தேர்வை நடத்தலாம் என கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon