டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டதன் முடிவு என்ன?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரொனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. லேசான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கெஜ்ரிவால் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. இதனிடையே பாரதிய ஜனதாவை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி சிந்தியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு நாட்களாக அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.






