தாய் திட்டியதால் சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தாய் திட்டியதால் கிணற்றில் குதித்து உயிருக்கு போராடிய சிறுமியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்து காளை. கணவனை இழந்த அவர் மகள் வளர்மதியுடன் பூ பறிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
இன்று காலை முத்துகாளை வளர்மதியை வேலைக்கு அழைத்த போது அவர் மறுத்ததால் மகளை திட்டியதாக கூறப்படுகிறது. மனமுடைந்த வளர்மதி அருகில் உள்ள கிணற்றில் திடீரென குதித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் காயத்துடன் உயிருக்கு போராடிய வளர்மதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.







