--- --:--:-- --

“அமெரிக்காவிற்கு செல்ல தேவையான விமான கட்டணம் தனது தந்தையின் ஒரு வருட சம்பளம்”- சுந்தர் பிச்சை

3

அமெரிக்காவிற்கு முதல்முறையாக செல்வதற்கான விமான கட்டணம் கிட்டத்தட்ட தனது தந்தையின் ஒரு வருட சம்பளமாக இருந்ததாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சாதனையாளர்களின் வெற்றி பயணத்தை அவர்களே தெரியப்படுத்தும் டியர் கிளாஸ் ஆப் 2020 என்ற நிகழ்ச்சியை யுட்யூப் நடத்தி வருகிறது.

 

அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவருமான சுந்தர் பிச்சை பங்கேற்று தனது வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தான் முதல் முறையாக அமெரிக்கா சென்றதற்கான விமான கட்டணம் கிட்டத்தட்ட தனது தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் இணையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

 

அமெரிக்காவிலிருந்து தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேச இரண்டு டாலர்களுக்கு மேல் செலவாகும் எனவும் அவர் கூறினார். அத்தகைய சூழலில் இருந்து தற்போதைய நிலைக்கு உயர்ந்ததற்கு தொழில்நுட்பம் மீதான தனது அதீத காதலே காரணம் என்று அவர் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon