--- --:--:-- --

இன்று முதல் மீண்டும் தொடங்கும் சின்னத்திரை படப்பிடிப்புகள்!

7

பொது முடக்கத்தால் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 36 சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகள் தொடங்குவதாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

 

தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகளுக்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் பெப்சி தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

அது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள், தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என முடிவு எட்டப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon