ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆறு தூர்வாரும் பணியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார் !!!
நொய்யல் ஆறானது கோவை,திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்களின் வழியாக செல்கிறது.158.35 கி.மீ வரை செல்லும் நொய்யல் ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.பருவ மழை துவங்கும் முன்னரே ஆற்றுப்பகுதிகளை தூர் வார தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன் ஒரு பகுதியாக கோவையின் முக்கிய நீராதாரமான நொய்யல் ஆறு தூர்வாரும் பணியினை ரூ.230 கோடி மதிப்பீட்டில் விரிவாக்குதல்,முனரமைத்தல்,நவீன மயமாக்கல் திட்டத்திற்கு பூமி பூஜை செய்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.சித்திரைச்சாவடி நொய்யல் அணைப்பகுதியில் இன்று அமைச்சர் துவக்கி வைத்தார்.

பின்னர்,தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நொய்யல் படித்துறையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் சிரார்த்தம்,தர்ப்பணம் செய்வோரின் வசதிக்காகவும்,பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்,பல்நோக்கு திட்டப்பணிகளுக்காக சிவனடி முன்னோர் வழிபாட்டு மண்டபம் கட்டும் பணியினை ரூ.5.91 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏ-க்கள் ஓ.கே.சின்னராஜ்,பி.ஆர்.ஜி.அருண்குமார்,எட்டிமடை சண்முகம்,கஸ்தூரிவாசு,வி.சி.ஆறுக்குட்டி,அம்மன் அர்ச்சுனன்,வி.பி.கந்தசாமி,மாவட்ட ஆட்சியர் ராசாமணி,நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






