எப்போது வேண்டுமானாலும் விஜய் மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவார்!
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா எந்த நேரத்திலும் இந்தியா அழைத்து வரப்படுவார் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. வங்கிகளிடம் சுமார் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு லண்டன் தப்பி சென்றார்.
சுமார் 4 ஆண்டுகள் கடந்த நிலையில் லண்டனில் இருந்த அவரை நாடு கடத்த தடையில்லை என கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவரை இந்திய அழைத்து வருவதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் எந்த நேரத்திலும் அவர் தாயகம் அழைத்து வரப்படுவார் எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
விஜய் மல்லையாவை அடைக்க மும்பையில் உள்ள ஆர்தர் சிறை தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






