முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முதல்வர் பழனிசாமி அழைப்பு!
தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 11 முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டு இருப்பது சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்யும்படி ஏற்கனவே ஆப்பிள், சாம்ஸங் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார். அந்தவரிசையில் உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதங்களை எழுதி உள்ளார்.
வோக்ஸ் வேகன், ஸ்கோடா, மெர்சிடாஸ் பென்ஸ், ஆடி,ஹோண்டா, டொயோட்டா,பிஎம்டபிள்யூ, லக்ஸ்ஜென், டையோவான், மோட்டார் கம்பெனி, ஜாகுவார், லேண்ட்ரோவர், ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் நேரடியாக கடிதங்களை எழுதி யுள்ளார்.
தமிழகத்தில் முதலீடு செய்வதில் உள்ள சாதகங்களை குறிப்பிட்டு முதலீடு செய்ய இங்கே வாருங்கள் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.






