கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும்,சீருடை,இனிப்புகள் வழங்கியும் மரியாதை செய்த ஊராட்சி மன்ற தலைவர் !!!
கொரோனா வைரசின் கொடூர தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதோடு,நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் மருத்துவம்,காவல்,தூய்மைப்பணியாளர்களின் பணி இன்றியமையாதது.பங்கு அளப்பரியது.
இந்த நிலையில் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்தும்,சீருடை,இனிப்புகள் வழங்கியும் கோவையில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் அசத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி தங்கராஜ் தலைமையில் துணைத்தலைவர் அசோக் குமார் மற்றும் மன்ற உறுப்பினர் முன்னிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.மேலும்,தூய்மைப்பணியாளர்களுக்கு புதிய சீருடைகள்,இனிப்புகள்,கொரோனா தடுப்பு மாத்திரை,மருந்துகளை வழங்கியும் அசத்தியுள்ளனர்.
மேலும்,இந்நிகழ்வில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக நிவாரண உதவிகள் வழங்கியோருக்கும் சால்வை அணிவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன.முன்னதாக புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் சூலூர் தாசில்தார் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட ஊராட்சி செயலர் சரவணன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.






