--- --:--:-- --

அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா ! கடல் அலை 6 அடி உயரம் வரை உயரும்!

13

அரபிக் கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான நிசர்கா இன்று பிற்பகலில் கரையை கடக்க உள்ளது. புயலின் தாக்கத்தால் மும்பையில் கடல் அலை 6 அடி உயரம் வரை உயரும் என்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலின்போது கூரைகள், மின்கம்பங்கள் சாய்ந்து விழும் என்றும் தெரிவித்துள்ளது.

 

புயல் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 மகாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . புயலின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அனைவரின் நலனுக்காக வேண்டி கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார்.

 

மும்பையில் கடற்கரை பூங்காக்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடவடிக்கையாக மகாராஷ்டிராவில் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையே பூனே உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் பலத்த மழை பெய்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon