--- --:--:-- --

வாட்ஸ் ஆப் மூலமாக மாஞ்சா விற்பனை மற்றும் காத்தாடி பறக்க விடும் போட்டியை நடத்திய கும்பல்!

7

சென்னையில் 3 வயது சிறுவனின் மூக்கை கிளைத்த மாஞ்சா நூலின் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து கஞ்சா விற்பனை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சூளைமேடு பகுதியில் வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவன் முகத்தை எங்கிருந்தோ பறந்துவந்த மாஞ்சா நூல் பதம் பார்த்து உள்ளது.

 

இதில் சிறுவனின் மூக்கு மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது தான் வாட்ஸ்அப் மாஞ்சா வெளிச்சத்திற்கு வந்தது. சிறுவனை பதம்பார்த்த மாஞ்சா நூலை விற்பனை செய்த கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

 

அப்போது மாஞ்சா மூலப்பொருட்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து பல இளைஞர்களை பிரபாகரன் ஈர்த்துள்ளார். அவரிடம் மாஞ்சா மூலப்பொருட்களை வாங்கி வீட்டிலேயே மாஞ்சா தயாரித்து பட்டம் பெறுவதை பல இளைஞர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். வாட்ஸ் ஆப் மூலமாகவே மாஞ்சா காத்தாடி பறக்க விடும் போட்டிகளையும் நடத்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து பிரபாகரனின் வீட்டில் இருந்து 250 காத்தாடி, காத்தாடி செய்ய பயன்படுத்தப்படும் கலர் பேப்பர்கள், மாஞ்சா நூல் கண்டு உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிரபாகரனுக்கு மூலப் பொருட்களை விற்று வந்த அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மற்றும் சூளைமேட்டில் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon