தமிழக பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான கே.என்.லட்சுமணன் மறைவு! பிரதமர் மோடி இரங்கல் !!!
தமிழக பாஜகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் கே.என்.லட்சுமணன். தமிழக பாஜகவுக்கு 2 முறை தலைவராக பதவி வகித்தவர்.சென்னை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் லட்சுமணன்.முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் சேலம் செவ்வாய்ப்பேட்டை இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு கே.என். லட்சுமணன் காலமானார்.

அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி,தமிழக பா.ஜ.க தலைவர் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தையும்,இரங்கலையும் தெரிவித்துள்ளார்.






