பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை சந்திப்பு!
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். ஊரடங்கு சமயத்தில் மாநில முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது இதுவே முதல்முறை. ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை யும் சந்திக்க உள்ளார்.
நாளை காலை 10 மணி அளவில் அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 10.30 மணியளவில் வந்தடைவார். பிற்பகலில் 1.15 மணிக்கு நரேந்திர மோடியை சந்திக்கிறார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். கொரொனா சமயத்தில் தங்கள் மாநிலத்துக்கு நிதிப் பங்கீடு தொடர்பாக இந்த சந்திப்பு இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது .
சமீபத்தில் வாயு கசிவு ஏற்பட்ட விபத்து தொடர்பாகவும் அதனால் பலர் உயிரிழந்தது தொடர்பாகவும் தற்பொழுது எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் பற்றி மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






