நாமக்கல் மாவட்டத்தில் தவறான உறவை கண்டித்த கணவன் கொலை! நாடகமாடிய மனைவி கைது!
நாமக்கல் அருகே கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார். கொடிக்கால் புதூரை சேர்ந்தவர் ராமன், சத்யா தம்பதியினர். அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத லாரி ஓட்டுனர் ராமமூர்த்திக்கும், சத்யாவுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த ராமன் மனைவியை கடுமையாக கண்டித்து வந்துள்ளான்.
தவறான உறவு இருக்க கணவன் தடையாக இருப்பதாக கருதிய சத்யா அவனை ராமமூர்த்தியுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட முடிவு எடுத்திருக்கிறார். அதன்படி கடந்த 21ஆம் தேதி தூங்கிக்கொண்டிருந்த ராமனை கழுத்தை நெறித்து இருவரும் கொலை செய்து விடுகின்றனர். உடல் நலக்குறைவால் உயிரிழந்தது போன்று மனைவி சத்யா நாடகம் ஆட அதனை நம்பிய உறவினர்கள் உடலுக்கு இறுதி மரியாதை செய்து முடித்தனர்.
ஆனால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ராமனின் சகோதரர்கள் விசாரணை நடத்திய போலீசார் கொலையாளிகளை இருவரையும் கைது செய்தனர்.







