அறக்கட்டளையை அபகரிக்க இந்து முன்னணி, பாஜவினர் முயற்சி? கலெக்டரிடம் சன்னியாசி முறையீடு – சிறை பிடிக்கப்பட்டதாகவும் புகார்
காரைக்குடி சாரதா அறக்கட்டளையை அபகரிக்கும் முயற்சியில், அதன் நிறுவனர் சிறைபிடிக்கப்பட்டதாக , உதவியாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. மீட்டு தரவும் கோரிக்கை.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அமராவதி புதூரில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகிறது சாரதா நிகேதன் கலைக் கல்லூரி.
இதன் நிறுவனராக சுவாமி ஆத்மானந்தன் இருந்து வருகிறார். இந்நிலையில், சாரதாஅறக்கட்டளைநிறுவன தலைவர் சுவாமி ஆத்மானந்தாவை சிறைபிடித்தும் , சாரதா அறக்கட்டளையின் சொத்தை அபகரிக்கும் நோக்கோடும் ,தன்னை, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வின் மைத்துனர் சூரியபிரகாஷ், பாஜக மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் இந்து முன்னணி அக்னி பாலா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம், ஆத்பானந்தாவின் உதவியாளர் சுகுணா நந்தா. புகார் மனு அளித்தார்.

மேலும்,சிறை பிடித்துள்ள, அறக்கட்டளை நிறுவனர் சுவாமி ஆத்மானந்தனை மீட்டு தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.






