--- --:--:-- --

நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர்ஆலோசனை !

7

கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டங்கள் தோறும் கொரொனாவின் பாதிப்பு நிலவரம் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

 

நான்காவது கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி முடிவடையும் சூழலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon