--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடையில்லை!

6

பள்ளிகளைப் பொருத்த மட்டில் இணைய வழி வகுப்புகள் குறித்த பிரச்சினையில் அமைச்சரின் விளக்கத்திற்கு பிறகு தெளிவு கிடைத்துள்ளது. இணையவழி வகுப்புகளை எடுப்பதற்கு பள்ளிகளுக்கு தடை இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர் பின்னர் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைத்து பள்ளிகளை நடத்துவதற்கு தடை என்றும் இணைய வகுப்புகளுக்கு முழுமையாக தடை இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஊரடங்கால் பள்ளிகள் மூடப் பட்டதால் பல பள்ளிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தினார்.

 

ஜூன் முதல் வகுப்புகளை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு முடிவு செய்யும் என்றும் அது குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon