கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற வழக்கு ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டாஸ்மாக் கடைகளில் ரசீது இல்லாமல் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானங்களை விற்கவேண்டும்.
விலைப்பட்டியலை ஒட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமன் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுபானங்களின் தரத்தை சரி பார்த்து கொள்முதல் செய்வதற்கான ஆதாரம் உள்ளதா என்றும் இதுவரை மதுபானங்கள் எப்படி கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் மதுபானங்கள் விற்கப்படும் போது ரசீது வழங்கப்படுகிறதா என்றும் கூடுதல் விலைக்கு விற்பவர்களை கண்டுபிடித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக வரும் 25ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.






