பிறந்து 10 நாளே ஆன குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
சென்னை மாங்காட்டில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாங்காடு லீலாவதி நகரை சேர்ந்த 55 வயதுடைய நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் உள்ள மகன், மகள் மற்றும் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது இன்று அந்த குழந்தைக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு கொரொனா பாதிப்பு என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.






