--- --:--:-- --

ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் விநியோகம்! 29 ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும்!

ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் விநியோகம்! 29 ஆம்  தேதி முதல் டோக்கன் வழங்கப்படும்!

கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும் , நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது . தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி , ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .

 

இதனால் , மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் முன்கூட்டியே அறிந்து , அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அக்கறையினால் , ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது .

 

அதன்படி , ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவி தொகையுடன் விலையில்லா அரிசி , சர்க்கரை , பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன . இதில் 98.85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையும் , 96.30 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன .

 

இது தவிர , ஊரடங்கு தொடர்ந்த காாணத்தினால் , மே மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும் , குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும் , சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இது வரை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு , மே மாதத்திற்கான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன . மேலும் , அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் , நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் , ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது . அதன்படி , குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து , கூடுதலான அரிசியும் ,மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி , இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது .

 

அதன்படி , தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் , அதாவது ஒரு கிலோ சர்க்கரை , ஒரு கிலோ துவரம் பருப்பு , ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் , அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் , விலையின்றி வழங்கப்படும் .

இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி , சர்க்கரை , பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி , மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது , இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் . நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ,வருகின்ற 29.5.2020 முதல் 31.5.2020 வரை , குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் ( Token ) வழங்கப்படும் . அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் . சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் , டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் .

 

இந்த நடைமுறையின் படி , ஜூன் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் . பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும் , சமூக இடைவெளியை கடைபிடித்தும் , தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது தமிழக அரசு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon