--- --:--:-- --

போலி போலீஸ் ஐ‌டி கார்டுடன் சிக்கிய நபர்! மொபைல் நிறைய ஆபாச படங்கள்!

14

14

ஊரடங்கின் போது போலீசாரின் வாகன தணிக்கையில் தப்பிக்க போலியாக காவல்துறை அடையாள அட்டை, வழக்கறிஞர் அடையாள அட்டையை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட இளைஞரை வேலூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி மன்னன் சிக்கியது எப்படி? வேலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தபோது அவர் தடுமாற்றத்துடன் பதிலளித்தார். முதலில் தன்னை ஒரு வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டவர் பின்னர்தான் ஒரு காவலன் என கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார். அடையாள அட்டையில் கிரைம் பிரான்ச், ஸ்பெஷல் ஆஃபீசர் என குறிப்பிட்டிருந்தது.

 

போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரது செல்போனை வாங்கி பார்த்ததில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. உஷாரான போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. ராணிப்பேட்டையை சேர்ந்த அந்த நபர் 24 வயதான ஜெகன் சச்சின்.

 

ராணிப்பேட்டையில் கடைகளில் சிசிடிவி பொருத்தும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆபாச வீடியோக்கள் அடிமை ஆன அவர் ஆயிரக்கணக்கில் தனது லேப்டாப், செல்போனிலும் தரவிறக்கி வைத்துள்ளார். இரவு நேரங்களில் பைக்கில் செல்லும்போது அங்கங்கே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வதால் எரிச்சல் அடைந்து உள்ளார் ஜெகன்.

 

அதனால் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக காவலர், வழக்கறிஞர் உள்ளிட்ட போலி அடையாள அட்டைகளை தயார் செய்துள்ளார். இந்த போலி அடையாள அட்டைகளை தயார் செய்வதற்கு ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கூறுகின்றனர்.

 

போலீசார் கைது செய்த போலீசாரிடம் இருந்து லேப்-டாப் செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது மோசடி போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்துதல், தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon