சிவகங்கை அருகே கொத்து கொத்தாக வளா்ப்பு மீன்கள் இறப்பு ! ரூ 8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குத்தகைக்காரர் தவிப்பு!!
சிவகங்கை நகரை அடுத்துள்ள வாணியங்குடி ஊராட்சிக்குட்பட்ட கீழ்பாத்தி கண்மாயில் ஏராளமான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை அடுத்துள்ள கீழ்பாத்தி கண்மாய் 2 கி.மீ. சுற்றளவு கொண்டது. கடந்த பருவ மழையில் இந்த கண்மாய் நீர் தேங்கியதால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது.இக்கண்மாயில் மீன்களை வளர்க்க சிவகங்கையை சேர்ந்த சங்கர் என்பவர் வாணியங்குடி ஊராட்சியில் ரூ ஒரு லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.
பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக குத்ததைதாரார் வேதனை
தொடர்ந்து சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்குஞ்சுகளை விட்டு வளர்த்துள்ளார். கொரனா காரணமாக மீன் பிடிக்க அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று இரவு முதல் ஏராளமாக கெண்டை, கெளுத்தி, சிலேப்பி, உள்ளீட்ட 2 டன் எடையுள்ள பலவகை மீன்கள் செத்து மிதந்தன. தகவல் அறிந்த குத்தகைதாரா்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் நன்கு வளர்ச்சியடைந்த மீன்கள் இறந்தது குறித்து காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட போவதாக தெரிவித்தனர். மேலும் இதனால் ரூ 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக முறையிட்டனர். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மர்மமான முறையில் இறந்த மீன்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
கொரானா காரணமாக பல்லாயிரகணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், சிவகங்கை அருகே மீன்கள் குவியல், குவியலாக செத்து கரையில் கிடந்தது. அப்பகுதி மக்களிடையே வேதனையில் ஆழ்த்தியது. மேலும் இறந்து கிடந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று ஏற்படும் முன் விரைந்து இறந்த மீன்களை அப்புறபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






