--- --:--:-- --

நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கிட்டு தற்கொலை!

18

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன், மருத்துவ பேராசிரியருமான கார்த்திக் திடீரென்று தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்ன? வாணிஸ்ரீ , கருணாகரன் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

 

36 வயதான இளைய மகன் அபிநய வெங்கடேசன் கார்த்திக். மருத்துவரான கார்த்திக் பெங்களூருவில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தன்னுடன் மருத்துவம் படித்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை வாணிஸ்ரீ வசித்து வருகிறார்.

 

கணவர் கருணாகரன் தன் மகனுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1800 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பழைய பங்களாவை பயன்படுத்தி வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக சென்னைக்கு வர முடியாததால் பெங்களூரிலேயே தங்கி கார்த்திக் மருத்துவம் பார்த்துள்ளார்.

 

அவரது தந்தை கருணாகரன் பெங்களூரு சென்று அவரை அழைத்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக இருவரும் தனி வீட்டில் ஆறாம் தேதி முதல் தங்கியுள்ளனர். பெங்களூருவிலிருந்து வந்ததாக கார்த்திக் மன அழுத்தம் காரணமாக அமைதியாகவே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சொத்து தொடர்பாக குடும்பத்தினருடன் மன கசப்பில் இருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

 

வியாழன் அன்று வீட்டின் பின்பக்கம் உள்ள தாழ்வாரத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு கார்த்திக் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது தந்தை கருணாகரனும் அக்கம்பக்கத்தினரும் திருக்கழுக்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் உடலை ஒப்படைத்தனர்.

 

மாதம் ஒருமுறை தனது மனைவியுடன் திருக்கழுக்குன்றம் வரும் கார்த்திக் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பூட்டி கிடந்த வீட்டை மருத்துவர் கார்த்திக் மற்றும் அவரது தந்தை சுத்தம் செய்து எடுத்து குதித்துள்ளனர். நடிகை வாணிஸ்ரீ அவ்வப்போது இந்த பங்களாவில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக வைத்திருந்தார்.

 

ஆனால் கார்த்திக் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்று இதுவரைக்கும் புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள் உறவினர்கள். மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தால் மனஅழுத்தம் ஏற்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது வரைக்கும் கார்த்தியின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.

 

யாரும் புகார் கொடுக்கவில்லை என்று திருக்கழுக்குன்றம் போலீசார் கூறியுள்ளனர். கார்த்திக்கின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து தடயவியல் நிபுணர்கள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்துள்ளனர். விளையாட்டு மருத்துவத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட கார்த்திக்கின் திடீர் பிரிவால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon