--- --:--:-- --

நாளை முதல் சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி!

3.1

சென்னை பெருநகர பகுதிகளை தவிர தமிழகம் முழுவதும் சலூன் மற்றும் அழகு நிலையங்களை நாளை முதல் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்னையை தவிர அனைத்து நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் சலூன் கடைகளையும் அழகு நிலையங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இவை இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சலூன் மற்றும் அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை கட்டாயம் பயன்படுத்த கூடாது. தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். தினமும் ஐந்து முறை கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

 

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள பணியாளர்கள் வாடிக்கையாளர்களை தொட அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

 

மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட கூடாது என்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்த பணியாளர்களை வரவழைக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon