--- --:--:-- --

கொரோனா தடுப்பூசிக்கு ஒரு வருடம் வரை ஆகக்கூடும்!

4

150க்கும் மேற்பட்ட கொரொனா தடுப்பூசி சோதனைகள் நடந்தாலும் அது நடைமுறைக்கு வர குறைந்தது ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஆகலாம் என கூறப்படுவதால் பல நாடுகள் பல்வேறு மருந்து கூட்டுகளை பயன்படுத்துவது பற்றிய ஆய்வை நடத்த தொடங்கியுள்ளனர்.

 

அமெரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மற்றும் ஆன்டிபயாடிக் அசித்ரோமைசினை கொரொனா நோயாளிகளுக்கு வழங்கலாம் என அங்குள்ள மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதித்துள்ளது. ஆண்டி வைரஸ் மருந்தான ரெம்டெசிவர், வலி நிவாரணியான பாரி சிட்டினி இரண்டையும் கலந்து சுமார் ஆயிரம் பேரிடம் சோதித்து பார்க்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 

சீனாவும் ஆண்டி வைரல் மருந்தை பரிந்துரைத்துள்ளது. இதன் பக்க விளைவுகள் குறைவு எனவும் கூறப்படுகிறது. மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ரத்தக்கொதிப்பு மருந்தான லோசட்டாலும் பிரான்சில் மூட்டுவலி மருந்தான டொஸ்லிஸ் மேப்பும் மருந்தும் சோதிக்கப் பட்டு வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon